டில்லி
இந்தியாவில் நேற்று 16,035 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,41,74,843 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,035 அதிகரித்து மொத்தம் 3,41,74,843 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 559 அதிகரித்து மொத்தம் 4,54,301 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 16,481 பேர் குணமாகி இதுவரை 3,35,40,950 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,66,434 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 1,701 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,01,551 ஆகி உள்ளது நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,998 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,781 பேர் குணமடைந்து மொத்தம் 64,33,919 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 24,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 8,909 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,06,793 ஆகி உள்ளது. இதில் நேற்று 464 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,780 பேர் குணமடைந்து மொத்தம் 47,97,409 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 80,626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 371 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,85,598 ஆகி உள்ளது இதில் நேற்று 7 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 341 பேர் குணமடைந்து மொத்தம் 29,38,653 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,140 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,94,089 ஆகி உள்ளது இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,004 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,374 பேர் குணமடைந்து மொத்தம் 26,43,616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,280 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 396 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,63,177 ஆகி உள்ளது. நேற்று 6 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,339 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 566 பேர் குணமடைந்து மொத்தம் 20,43,616 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.