ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தினம் தினம் 3000 காண்டம் என்ற அறிவியல் அறிவிப்பை செய்தவர் பற்றிய http://mdaily.bhaskar.com/…/NAT-TOP-bjp-leaders-shower-curr… பிரபல வட நாட்டு மீடியா பார்த்திர்களா நட்புடன் Stalin Jacob கேள்வி
அன்புள்ள ஸ்டாலின் .,
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ரெகார்ட் டான்ஸ் ., வேறு உருவில் வந்து ரீட்டா டான்ஸ் கேக்கும் வருத்தபடாத வாலிபர் சங்கம் போல வட மாநிலத்தில் காசுக்கு ஆடை விலக்கும் மேடை நிகழ்சிகள் பிரபலம். அந்த நிகழ்ச்சியில் மேடையேறி பணத்தை நீட்டி ஆடை விலக்கி குத்தாட்டம் போட்டு இருக்கிறார் மாண்புக்குரிய பிஜேபி தலைவர் .
இது மட்டுமில்லை பிஜேபி MLAக்கள் கர்நாடக சட்டமன்றத்திலும் Pronography படங்களை பார்த்ததை நாடே முகம் சுழித்தது .
சதா சர்வகாலம் Dr.Subramanian swamy புகழும் 16 வயது பிஞ்சுகளை கற்பழித்த Asaram Bapu Ji ஆதரவு என்ற பிஜேபி நீளும் கரத்தின் அளவு மிக பெரியது …
ஒரு விஜயகாந்த “தூவை” போல 100 மடங்கு அதிர்வலைகளை ஏற்படுத்த கூடிய மனசாட்சி யுடன் பேசிய அந்த ஊடகவியலன் சொல்வதை கேளுங்கள் .
குருட்டு தேசியவாதத்தை பரப்புரை செய்து, கன்ஹையா சொல்லாததைச் சொன்னது போல தொடர்ந்து பரப்பி வந்த ஜீ நியூஸ் தொலைக்காட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே எனது வேலையை ராஜினாமா செய்கிறேன்.
ராம நாகா மற்றும் இதரர்களின் பின்புலமும், வறுமையை எதிர்கொண்டு போராடுவதுதான். ஜேஎன்யூவில் வழங்கப்படும் உதவித்தொகையின் வழியாகத்தான் அவர்கள் தங்கள் கல்வியை தொடர்வதோடு, வாழ்க்கையில் நெடுந்தூரம் பயணிப்பதற்கான உறுதியையும் பெறுகிறார்கள். ஆனால், டி.ஆர்.பி-க்காக அலையும் வக்கிரமான நமது மனநிலை ஏறக்குறைய அவர்களது வாழ்க்கையையே நாசப்படுத்தியிருக்கிறது
ஒரு நான் ஒரு ஊடகவியலாளன் மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனும் கூட. இந்த நாட்டின் பெயரால் குருட்டு ‘தேசியவாதம்’ எனும் நஞ்சு பரப்பப்படுகிறதுஒரு குடிமகனாகவும், வேலை சார்ந்த அறத்தின் அடிப்படையிலும் இந்த நஞ்சு மேலும் பரவாமல் இருக்கச் செய்வது எனது கடமையாகும்.
ஒவ்வொரு செய்திக்கும் ’மோடி கோணம்’ கொடுத்து, மோடி அரசின் செயல்திட்டத்திற்கு ஊக்கம் சேர்க்க வேண்டிய தேவை எங்கிருந்து எழுகிறது?
ஒவ்வொரு செய்திக்குப் பின்னாலும் மோடி அரசை போற்றி புகழும் ஒரு செயல்திட்டம், மோடி அரசை விமர்சிப்பவர்களை காலி செய்யும் யுக்தி. இவையனைத்தும் என்ன?
நாம் ஏன் இவ்வளவு கேவலமானவர்களாக, அறமில்லாதவர்களாக, பூமியின் மேலுள்ள அழுக்குகளாக மாறிப் போனோம்? இந்தியாவின் சிறந்த ஊடகக் கல்வி நிலையத்தில் படித்துவிட்டு ஆஜ் தக், பிபிசி மற்றும் ஜெர்மன் அலை எனப்படும் ட்யூட்ஸ் வெல் போன்ற உயர்தர நிறுவனங்களில் பணி புரிந்துவிட்டு, நான் ஈட்டிய நற்பெயரை எல்லாம் ’ச்சீ’ (அழுக்கடைந்த) ஊடகவியலாளன் என்னும் சொல் சிதைக்கிறது.நமது நேர்மை கந்தலாகி கிடக்கிறது. இதற்கு யார் பொறுப்பாவது?
சொல்வதற்கு நிறைய இருக்கிறது. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலைக் குறித்து தொடர்ந்து எதிர் பிரச்சாரம் நடந்து வருகிறது ஏன்? அதிகாரம் மற்றும் தண்ணீர், கல்வி குறித்து அவர் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை மட்டுமில்லாமல், அவர் செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் தீவிரமாக விமர்சிப்பது ஏன்? ஒரு ஊடகவியலாளனாக கெஜ்ரிவாலோடு முரண்படுவதற்கு அனைத்து உரிமைகளும் ஒருவருக்கு உண்டு. ஆனால், கோடாரியால் தாக்குவது உரிமை அல்ல.
இதேபோன்ற அணுகுமுறைதான் தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலா விஷயத்திலும் நிகழ்ந்தது. முதலில் நாம் அவரை தலித் ஆய்வு மாணவர்கள் என்றோம், பின்னர் தலித் மாணவர் என்றோம். இப்படியெல்லாம் அழைத்தது கூட, செய்திகள் நேர்மையாக சென்றிருந்தால் பிரச்சினையாக இருந்திருக்காது. ரோஹித் வெமுலாவை தற்கொலைக்குத் தள்ளியதில் ஏபிவிபி தலைவர்கள் மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா போன்றவர்களுக்கு இருக்கும் பங்கைக் குறித்து விசாரணை நடந்து வருகிறது (என்ன சிக்கல் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது). ஆனால், ஊடக நிறுவனமாக பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்வதில்தான் முனைப்பாக இருந்தோம். இதன் மூலம், யார் மீது கேள்வி எழுப்பப்பட்டதோ, அவர்களை காப்பாற்றும் வேலையை பார்த்தோம்.
சகிப்புத்தன்மை பற்றிய விவாதம் மேலெழுந்த போது, மதிப்பிற்குரிய எழுத்தாளர் உதய் பிரகாஷ் மற்றும் அனைத்து மொழிகளின் முக்கியமான எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளை திருப்பி கொடுத்தனர். எப்போதும் போல நாம் அவர்களை பற்றி கேள்வி எழுப்பினோம்.
பாகிஸ்தான் வாழ்க என்ற குரல் இல்லவே இல்லாத காணொளியை பலமுறை ஒளிபரப்பினோம். இருட்டில் கன்ஹையாவின் குரல்தான் கேட்டது என்று உறுதியாக எப்படி நம்ப முடிந்தது? பாரதீய கோர்ட் ஜிந்தாபாத் என்னும் முழக்கத்தை பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று திரித்து, அரசின் செயல்திட்டத்திற்கு அடிபணிந்து, சில இளைஞர்களின், குடும்பங்களின் கனவுகளை சிதைக்கும் நிலைக்கு சென்று இருக்கிறோம். காவல்துறை தனது விசாரணையை முடித்து, முடிவை சொல்லும் வரை காத்திருந்திருக்கலாம்.
உமர் காலித்தின் சகோதரியை வண்புணர்ச்சி செய்துவிடுவோம், ஆசிட் வீசி விடுவோம் என தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு, துரோகியின் சகோதரி என்று முத்திரை குத்தப்பட்டதில் நமக்கு பங்கில்லையா? ஒன்றுக்கு நூறு முறை தேசத்திற்கு விரோதமாக எந்த முழக்கத்தையும் ஆதரிக்கவில்லை என கன்ஹையா கூறும்போது, நாம் பற்ற வைத்தது பாஜக அரசின் திட்டத்திற்கு உதவியாக இருந்ததால், எவருமே கன்ஹையாவின் குரலை கேட்கவில்லை. கன்ஹையாவின் வீட்டை பார்த்தீர்களா? அது வெறும் வீடல்ல, இந்நாட்டின் விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களின் துயர வெளிப்பாடு. இந்நாட்டில் புதைக்கப்படும் எண்ணற்ற கனவுகளின் புதைவிடம் அது. ஆனால், நாம் இவற்றையெல்லாம் பார்க்க கண்ணற்றவர்களாகவே இருக்கிறோம்!
ஜேஎன்யூ கிரிமினல்களின் கூடாரமா அல்லது நீதிமன்ற வளாகத்தில் வைத்தே இடதுசாரித் தொண்டர்களை தாக்கிய பாஜக எம்.எல்.ஏ ஓபி சர்மா கிரிமினலா? எம்.எல்.ஏவும் அவரது நண்பர்களும் சிபிஐ தொண்டர் அமீக் ஜமேய்யை கீழே தள்ளி தாக்கும்போது, காவல்துறையினர் வேடிக்கை பார்த்தனர். நம்முடைய தொலைக்காட்சியும் இதே காட்சியை காண்பித்து ஓபி.சர்மா தாக்கியதாக குற்றம் சாட்டியது. அது என்ன குற்றச்சாட்டு என்று நான் கேட்டேன். மேலிட உத்தரவு என்ற பதில் வந்தது. நமது மேலிடம் எப்படி இவ்வளவு அதள பாதாளத்தில் தள்ளப்பட்டது. மோடிக்கு ஆதரவாக எழுதுவதை கூட புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது ஓபி.சர்மா, ஏபிவிபிக்கும் கூட பரிந்துரைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை எப்படி புரிந்து கொள்வது?
என்னுடைய கையறு நிலையையும், என்னுடைய ஊடக செயல்பாட்டையும் எண்ணி வெட்கப்படுகிறேன். இதற்காகத்தான் அனைத்தையும் விட்டுவிட்டு ஊடகப்பணிக்கு வந்தேனா? கண்டிப்பாக இல்லை.
என் முன் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன – ஒன்று ஊடகப்பணியையே துறக்க வேண்டும் அல்லது தர்மசங்கடமான இந்த நிலையிலிருந்து விலக வேண்டும். நான் இரண்டாவதை தேர்வு செய்கிறேன். என்னுடைய வேலைக்கும், அடையாளத்திற்கும் சம்பந்தமுள்ள விஷயங்களை தாண்டி தேவையில்லாத எதையும் கேட்கவில்லை. சிறு துரும்பென்றாலும், ஏதோவொரு வகையில் நானும் இதற்கு பொறுப்புதான். இதை செய்வதின் வழியாக எனக்கு வேறு இடங்களில் வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து இருக்கிறேன்.
கன்ஹையாவையும், ஜேஎன்யூவின் பிற மாணவர்களையும் தேச விரோதிகள் என்று முத்திரை குத்துவதில் நாம் வெற்றியடைந்துவிட்டோம். ஆனால், நாளை ஏதாவதொரு மாணவர் கொல்லப்பட்டால், யார் பொறுப்பு? சிலரின் கொலைகளுக்கு மட்டுமல்ல, சில குடும்பங்களின் இருப்புக்கும் அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறோம். கலவரங்களை மட்டுமல்ல உள்நாட்டுப் போரையே உருவாக்கும் அளவுக்கு நஞ்சை மனித மனங்களில் விதைத்து வைத்திருக்கிறோம். இது எந்த வகையான நாட்டுப்பற்று? எந்த வகையான ஊடகவியல்?
ஆனால், இதே வேலையில் தொடர்ந்து நீடித்தால் லட்ச ரூபாய் சம்பளத்தை விரைவில் எட்டிவிட முடியும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால், இந்த நல்ல சம்பளம் என்னிடமிருந்து கடுமையான விலையை கேட்கிறது. அதை இனிமேலும் என்னால் தர இயலாது. சாதாரண நடுத்தர வர்க்க குடும்ப பின்புலத்திலிருந்து வருகிறவன் என்ற முறையில், ஒரு மாதம் சம்பளம் இல்லையானாலும் கடுமையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பது புரிந்தாலும், இனிமேலும் என் மனசாட்சியை நான் கொல்ல விரும்பவில்லை.
அன்புடனும், மதிப்புடனும்
விஷ்வா தீபக்.
நமது இந்தியா சுதந்திர போராட்டத்தில் தியாகிகளை காட்டி கொடுத்து பிரிட்டிஷ் சர்காருக்கு பூட்ஸ் பாலிஷ் போட்டு சேவை செய்த RSS வழி வந்த பிஜேபி
கைகளில் இப்போது சிறகொடிந்து இருப்பதை காண பொறுக்காமல் வழிமொழிய வேண்டியவை என்ற காரணத்தினால் வழிமொழிவது
Sa.Ve.nkat Ra.manujam
Venkat Ramanujam