94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2022 மார்ச் 27 ஆம் தேதி நடக்கிறது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து ஒரு படம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த வருடத்துக்கான ஆஸ்கர் பரிந்துரைப் படத்தை தேர்வு செய்ய ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் இயக்குனர் ஷாஜி என்.காருண் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அவர்கள் முதல்கட்டமாக போட்டிக்கு வந்தப் படங்களில் 14 படங்களை தேர்வு செய்துள்ளனர்.
அதில் முக்கியமான சில படங்கள்.
மண்டேலா: யோகி பாபு நடிப்பில் எடுக்கப்பட்ட அரசியல் நையாண்டி படமான மண்டேலா இந்த வருட ஆஸ்கர் போட்டிக்கான 14 படங்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நாயாட்டு: மார்டின் ப்ரக்காட் இயக்கத்தில் குஞ்சாகாபோபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா விஜயன் நடித்த படம்.
ஷெர்னி: வித்யாபாலன் நடிப்பில் காட்டுயிர் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட படம்.
செல்லோ ஷோ: பேன் நளினி இயக்கத்தில் வெளிவந்த குஜராத்தி திரைப்படம்.
சர்தார் உத்தம்: ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற நிகழ்வின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்திப் படம்.
ப்ரிட்ஜ்: இதுவொரு அசாமி திரைப்படம். பாலம் இல்லாததால் கிராமத்தவர்கள் படும் கஷ்டங்களை சொல்லும் படம். இந்த ஆறில் ஒரு படம் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது.