ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ் நடிக்கின்றனர்.

நேற்று இந்த படத்தின் பூஜை போடப்பட்டது. இதில் ட்ரீம் வாரியர்ஸின் 40 வது தயாரிப்பு என குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்.

நெல்சன் வெங்கடேசனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரே இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

படத்துக்கு ஒளிப்பதிவு கோகுல் பினோய், எடிட்டிங் சாபு ஜோசப். கலை இயக்கம் சிவசங்கர். நிர்வாக தயாரிப்பு அரவிந்த்ராஜ; பாஸ்கரன். நேற்று நடந்த பூஜையில் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்களுடன் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் கலந்து கொண்டார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.