
தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் கடந்த ஏப்ரலில் வெளியான படம் “கர்ணன்” .
தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் சர்வதேச வெளியீட்டின் படி, தற்போது OTTயில் ஒளிபரப்பாகும் படங்களில் மிகச்சிறந்த ஐந்து படங்களில் இடம் பெற்ற ஒரே இந்திய படமாக கர்ணன் இடம்பிடித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இந்திய திரைப்படமாக கர்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த தென்னிந்திய திரைப்படத்துக்கான விருதை கட்டில் திரைப்படம் பெற்றது. இப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்த விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டது.
[youtube-feed feed=1]