க்னோ

த்தரப்பிரதேச சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிருப்தி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.

இன்று உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த பதவி  எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கமாகும்.  உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கடந்த 14 ஆண்டுகளாகத் துணை சபாநாயகர் தேர்வு நடக்கவில்லை.

எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக நரேந்திர வர்மா நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.  அதேவேளையில் அதே கட்சியின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரான நிதின் அகர்வால் என்பவரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.   ஆளும் பாஜக அதிருப்தி வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளதால் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப் பூர்வ வேட்பாளர் நரேந்திர வர்மா, “துணை சபாநாயகர் பதவி எதிர்க்கடிச்யினருக்கு ஒதுக்கப்படுவது வழக்கமாகும்,  எனது இளைய சகோதரர் நிதின் சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி  பெற்று பிறகு கட்சிக்கு எதிராக பணியாற்ற தொடங்கி விட்டார்.  பாஜக ஆனால் அவருக்கு ஆதரவு அளித்து பாரம்பரியத்தை மாற்ற திட்டமிட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.