டில்லி
இந்தியாவில் நேற்று 14,073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,40,66,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,073 அதிகரித்து மொத்தம் 3,40,66,760 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 146 அதிகரித்து மொத்தம் 4,52,156 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 19,785 பேர் குணமாகி இதுவரை 3,34,12,138 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,89,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 1,553 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,89,982 ஆகி உள்ளது நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,39,760 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,682 பேர் குணமடைந்து மொத்தம் 64,16,998 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 29,627 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 7,955 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 48,46,766 ஆகி உள்ளது. இதில் நேற்று 57 பேர் உயிர் இழந்து மொத்தம் 26,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,769 பேர் குணமடைந்து மொத்தம் 47,28,497 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 90,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 264 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,85,874 ஆகி உள்ளது இதில் நேற்று 6 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,937 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 421 பேர் குணமடைந்து மொத்தம் 29,35,659 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 9,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,233 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,85,874 ஆகி உள்ளது இதில் நேற்று 15 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,884 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,434 பேர் குணமடைந்து மொத்தம் 26,34,968 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 15,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 332 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,85,874 ஆகி உள்ளது. நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,302 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 585 பேர் குணமடைந்து மொத்தம் 20,39,545 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 6,193 பேர் சிகிச்சையில் உள்ளனர்.