சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,233 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,30,251 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 4,92,83,503 பேரின்மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இன்று புதிதாக மேலும் 1,233பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,85,874 ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 1,434 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 26,34,968 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24மணி நேரத்தில் மேலும் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை 35,884 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் 15,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் 160 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவையில் 136 பேரும், ஈரோட்டில் 97 பேரும், செங்கல்பட்டில் 90 பேரும், தஞ்சாவூரில் 71 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.