சென்னை: ’சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்’ புலிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை தமிழர் கட்சி கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு (2019) நடைபெற்ற பிறந்தநாள் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனக்கும், பிரபாகரனுக்கும் இடையேயான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தவர், தான் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித்தபோது, பிரபாகரன் காட்டிற்குள் இருந்த போட்டு அம்மன் வீட்டிற்குள் அழைத்துச்சென்று விதவிதமான உணவுகளை விருந்தளித்தார் என்று பேசியிருந்தார். இது அப்போதே கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. பலர் சீமானின் கருத்துக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.
இருந்தாலும், சீமான் தனது அரசியல் லாபத்துக்காக இன்னும் விடுதலைப்புலிகள் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இது காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சீமான் ஆமைக்கறி சாப்பிட்டதாக கூறுவது பொய் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீமான் பிரபாகரணை சந்தித்து இரண்டு நிமிடங்கள் கூட கிடையா.து அவர் பொய் சொல்கிறார். ஆனால் அவர் தான் பிரபாகரனுடன் சேர்ந்து, ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் பொய் சொல்லி திரிகிறார். அவர்மீது விடுதலைபுலிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இலங்கைக்கு சென்று பிரபாகரணை சந்தித்த சீமான், அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால், பிரபாகரன் போட்டோ எடுக்க கூடாது என்று மறுத்துவிட்டார் என்று கூறிய வைகோ, ஆனால், சீமானோ, புலிகள் குறித்து பேசி ஒன்றும் தெரியாத இளைஞர்களை தன்பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார். அதற்காக என்மீது அவதூறுகளை பேசி வருகிறார்.
நான், ஸ்டெர்லைட் ஆலையில் பணம் வாங்கிட்டதாகவும், நியூட்ரினோவிடம் பணம் வாங்க தனது மகனை அனுப்பிவிட்டார் என்று சொல்லி வருகிறார், அவரது ஆட்கள் மூலமாக வீடியோ வெளியிட்டு அவதூறு பரபப்பி வருகிறார்.
சீமானின் அவதூறான வீடியோவை பார்த்த அன்றைய தினசே சிவகாசி ரவி என்பவர் என் குடும்பத்திற்காக தீக்குளித்து இறந்துபோனார். இப்போது அவர் குடும்பத்தை நான்தான் பார்த்துக்கொள்கிறேன். படிக்க வைத்திருக்கிறேன். மாதா மாதம் செலவுக்கு பணம் கொடுத்திருக்கிறேன்.
அதுபோல எனது மாமாவை பற்றி இப்படி கேவலமாக காணொலி வெளியிடுகிறார்களே என்று எண்ணிய எனது மனைவியின் அண்ணன் மகன் சரவண சுரேஷ் தீக்குளித்து இறந்து போனார். சீமானன் அவதூறான வீடியோவுக்கு என் குடும்பம் ஒரு உயிரை இழந்திருக்கிறது என்று பேசியுள்ளார். ‘
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.