சென்னை: அரசு பால்வளத்துறையின் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் நாட்டு பசும்பால் விற்பனைக்கு கொண்டு திட்டமிடப்பட்டு வருவதாக பால்வளத்துறைஅமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

கோடம்பாக்கத்தில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தீபாவளி பண்டிகையொட்டி ரூ.2.2 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியவர்,  ஆவின் பால், அரசின் விலையை விட கூடுதல் விலை விற்ற 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

நாட்டு மாட்டுப்பாலுக்கு பொதுமக்களிடையே வரவேற்பு உள்ளதால்,  ஆவினில் விரைவில் நாட்டு மாட்டுபால் விற்பனைக்கு கொண்டு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்தவர், தற்போது அனைத்து வகை ஜாதி மாடுகளின் பால் ஏ-1 பால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டு மாட்டு பால் விற்பனை செய்தால் ஏ-2 பால் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

[youtube-feed feed=1]