கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சமந்தா டீரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சூர்யாவை (Suriya) வைத்து NGK படத்தையும், கார்த்தியை (Karthi) வைத்து சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் படங்களையும் தயாரித்துள்ளது.

இந்த புதிய படம் அறிமுக இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் Women Centric படமாக உருவாகிறது. சமந்தா ஏற்கனவே யூ டர்ன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இது போல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.