புஷ்கர் – காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் இன்று தொடங்கியுள்ளது.
2017-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெளியான இந்தப் படத்தின் அனைத்து ரீமேக் உரிமைகளும் தயாரிப்பாளர் சஷிகாந்திடம்தான் உள்ளன. இந்தியில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ரீமேக் தயாரிக்கும் பணிகளையும் மேற்கொண்டார். புஷ்கர் – காயத்ரி இருவருமே இயக்க ஒப்பந்தமானார்கள்.
மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர்.
இதில் வழக்கறிஞராக நடிக்க ராதிகா ஆப்தேயை ஒப்பந்தம் செய்துள்ளனர்.தமிழில் இந்த வேடத்தை ஷ்ரத்தா ஸ்ரீநாத் செய்திருந்தார்.
இந்நிலையில் புஷ்கர் – காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பை துபாயில் இன்று தொடங்கியுள்ளனர்.