சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதையடுத்து, அனைத்து ஊராட்சிகளையும் திமுக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கிராமப்புறங்களிலும் திமுக தனது வெற்றியை நிலைநாட்டி, அதிமுக, பாஜக கட்சிகளை வாஷ்அவுட் செய்துள்ளது. இது அதிமுக, பாஜக தலைமையிடத்தில் பேரதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 140 இடங்களின் 125 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 120 இடங்களில் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மற்றவை 1 இடங்களை கைப்பற்றி உள்ளது.
அதுபோல, தேர்தல் நடைபெற்ற 1380 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில், தேர்தல் முடிவு அறிவிக்கபட்ட230 இடங்களில் திமுக கூட்ட 200 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இதில் அதிமுக பாஜக கூட்டணி 17 இடங்களிலும், சுயேச்சைகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
அனைத்து மாவட்ட ஊராட்சிகளையும் கைபற்றி திமுக கூட்டணி பெற்ற 100% சரித்திர சாதனை படைத்துள்ளது. அதே வேளையில், பாஜக ஒரு இடத்தைக்கூட கைப்பற்றாத நிலை உருவாகி உள்ளது. இது கட்சி தலைமைக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை நகர்புறங்களில் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த பாஜக, அதிமுக கட்சிகள், தற்போது கிராமப்புற மக்களிடம் இருந்தும் புறக்கணிக்கப்பட்டு இருப்பது அண்ணமலைக்கும், எடப்பாடிக்கும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.