டெல்லி: லக்கிம்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர்  ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நாளை ராஷ்டிரபதி பவன் சென்று  குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு கொடுக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளின் மீது காரை ஏற்றி கொலை செய்தார். இதையடுத்து வெடித்த வன்முறையில் மொத்தம் 9 பேர் பலியாகினர்.  இதில், உச்சநீதிமன்றத் தலையிட்டதைத் அடுத்து,  முக்கிய குற்றவாளியான , மத்திய இணை யமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர்மீது  8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  லக்கிம்பூர் வன்முறை குறித்த உண்மை தகவல்கள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி  தலைமையில் மூத்த காங்கிரஸ்  அளிக்கவுள்ளனர். மேலும்,  லக்கிம்பூர் வன்முறையில் நியாமாகவும், சுதந்திரமான  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.