சென்னை: நேற்று  நடைபெற்ற சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், சிஎஸ்கே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. தோனியின் அதிரடி ஆட்டத்தின் காரணமாக 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதே வேளையில், ஆட்டத்தின்போது, டெல்லி அணியின் பவுலரான அஸ்வின் ரவிச்சந்திரனின் நடவடிக்கையும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அஸ்வினை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.  அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில்  நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதலாவது குவாலிஃபைர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் பேட்டிங் செய்ய டெல்லி கேபிட்டல்ஸ் அணி களம் கண்டது. களத்தில் இறுதிவரை ஆடிய கேப்டன் பண்ட் தனது அரைசத்தை (35 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 51 ரன்கள்) பதிவு செய்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 173 இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது, களத்தில் மட்டையுடன் இருந்த சிஎஸ்கே வீரர் ருத்துராஜிடம்,  டெல்லி அணியில் விளையாடி வரும், மூத்த வீரர் அஸ்வின்  நடந்து கொண்ட விதம் சலசலப்பையும், கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

அஸ்வின் பொதுவாக மைதானத்தில் பவுலிங் போட வரும் போது திடீரென கிரீஸ் லைன் வரை வந்துவிட்டு பின்னர் பவுலிங் போடாமல் திரும்பி செல்வது வழக்கம். பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்றும் வகையில், அஸ்வின் நடந்துகொள்ளும்விதம் ஏற்கனவே கடும் விமர்சனங் களை உருவாக்கி உள்ளது. அதுபோல நேற்றும்,  பேட்ஸ்மேன்களை கடுப்பேற்றும் விதமாக அஸ்வின் நடந்துகொண்டது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, மன்கட், ஸ்டிரைக்கர் பேட்ஸ்மேன் கிரீஸை தாண்டி இருக்கிறாரா என்றும் சோதனை செய்வது, பவுலிங் போடுவது போல சென்று கடைசி நொடியில் பவுலிங் போடாமல் நிறுத்தி பேட்ஸ்மேன்களை கடுப்பேற்றுவது போன்ற செயல்களை செய்வது அஸ்வின் ரவிச்சந்திரனின் வாடிக்கையாகும். இது பல முறை விமர்சிக்கப்பட்ட நிலையிலும், அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. ஏற்கனபே மன்கட் முறையில் பேட்ஸ்மேன்களை அவுட் ஆக்குவது விமர்சிக்கப்பட்டு வருவதுபோல, நேற்று அவர் நடந்துகொண்ட  சம்பவமும் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த சிஎஸ்கே டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, 173 ரன் இலக்காக சிஎஸ்கே அணி வெறித்தனமாக விளையாடிக்கொண்டிருந்தனர். ஆட்டத்தில் ருத்துராஜ் பேட்டிங் செய்தபோது,  பந்து வீசி வந்த, அஸ்வின்,  பவுலிங் போட வந்துவிட்டு கடைசி நொடியில் பவுலிங் செய்யாமல் திரும்பி சென்றார்.

இறுதிப்போட்டிக்குள் நுழைய வேண்டும் என்ற வெறியுடன் சிஎஸ் அணி ஆடிக்கொண்டிருந்த நேரத்தில் அஸ்வினின் நடவடிக்கை பேட்ஸ்மேன் ருத்துராஜ்க்கு கடும் எரிச்சசை ஏற்படுத்தியது. அதையடுத்து, அஸ்வின் அடுத்த பந்தை வீச வந்தபோது, ரித்துராஜ், பேட்டிங் செய்யாமல் விலகினார். இது அஸ்வினினுக்கு நோஸ்கட் செய்தது போல இருந்தது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதை பார்க்கும் நெட்டிசன்கள், அஸ்வினின்  நடவடிக்கையை கடுமையாக  விமர்சனம் செய்து வருகிறார்கள். மூத்த வீரரான அஸ்வின், களத்தில் இப்படி சிறுவர் போல நடந்து கொள்வதை அஸ்வின் நிறுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

லெஜண்ட் அஸ்வின், தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்றும்,  தேவையில்லாத சர்ச்சையில் அஸ்வின் ஈடுபட கூடாது அறிவுரை வழங்கி வருகின்றனர்.

4.9 மில்லியன் ரசிகர்கiள கொண்டுள்ள  அஸ்வின், தலைமைக்குரிய பக்குவத்துடன் நிதானமாகவும், பக்குவமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், நேற்றைய ஆட்டத்திர் அவர் நடந்துகொண்டவிதம் அருவறுப்பானது என்றும் நெட்டிசன்கள் குமுறி உள்ளனர்.

நேற்று சிஎஸ்கே அணிக்கும் டெல்லி அணிக்கும் இடையிலான குவாலிபயர் ஃப்ளே ஆப் சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் தோனி பினிஷிங் செய்து சிஎஸ்கேவை வெற்றிபெற செய்தார்.

இந்தியாவின் நட்சத்திர மற்றும் முண்ணனி பந்து வீச்சாளாரான அஸ்வின் ரவிச்சந்திரன்  “கேரம் பால் “அஸ்வின் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். உலகில் கேரம்பால் வீசுவதில் உலகில்  2 பேர் அவற்றில் இவரும் ஒருவர். 

மூத்த வீரர்களான சச்சின் & டிராவிட் அவர்களுக்கு அடுத்து ஐசிசி கிரிக்கெட் வீரர் விருதை பெற்ற ஒரே இந்திய வீரர் அஸ்வின். 

டெஸ்டில் மிகவேகமாக 50, 100, 150, 200, 250 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய நபர் அஸ்வின்.

அர்ஜீனா விருது, ஐசிசி கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த ஐசிசிடெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற பெருமைக்குரிய அஸ்வின் விமர்சனங்களுக்கு ஆட்படாமல், ஆட்டத்தை தொடர வேண்டும் என்பதே தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் ஆவல்.

https://twitter.com/i/status/1447312456032800769