புதுடெல்லி:
மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா உடனடியாக பதவி விலகக் கோரி நாளை மவுன விரத போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு அஜய் மிஸ்ரா தேனியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் லக்கிம்பூர் கேரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாடு முழுவதும் மவுன விரத போராட்டத்தைக் காங்கிரஸ் கடைப்பிடிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel