டில்லி
இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் கே வி சுப்ரமணியன் பதவி விலகி உள்ளார்.
பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன், நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்பிரமணியம் 2014ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரின் பதவி 2017 ஆம் ஆண்டு முடிந்த நிலையிலும் அவருக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அவர் பதவிக்காலம் முடியும் நிலையில் முன்கூட்டியே ஜூன் மாதம் பதவி விலகினார். பிறகு அந்த பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில் புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக கே வி சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் அவர் இந்த பதவில் நீடிப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.
இன்று இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது 3 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகியதாகத் தெரிவித்துள்ளார்.