துபாய்:  ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மும்பை அணி பவுலர் நாதன் கோல்டர்நைல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வானார்.

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட 2021 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் நேற்று மோதின.

ஆட்டத்தின்போது, டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி மட்டையுடன் களமிறஙகியது. தொடக்க ஆட்டக்காரர்களாக யின் எவின் லூயிஸ், ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், லூயிஸ் 24 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து களமிறங்கிய  கேப்டன் சஞ்சு சாம்சன் (3), சிவம் துபே (3)., பிலிப்ஸ் (4), டேவிட் மில்லர் (15), திவாட்டியா (12) என அடுத்தடுத்து விக்கெட்டுகள்  சரிய  20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களில் சுருண்டது. இது ராஜஸ்தான் அணி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மும்பை அணி பவுலர்கள் நாதன் கோல்டர்நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை மட்டையுடன் களத்தில் குதித்தது.  தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தது.  தொடக்க ஆட்டக்காரர் ரோகித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் 13 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் வெளியேற, இஷான் கிஷன் 25 பந்துகளில் அரை சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.  8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்து  8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றுள்ளது.

[youtube-feed feed=1]