தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.

பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அனிகா நாயகியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி வித விதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் .

இந்த நிலையில் தலையிலும் தோள்பட்டையிலும் மெழுகுவர்த்தியை ஏற்றி அது கொழுந்து விட்டு எரியும் படி ஃபோட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.