தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்ததாக தயாரிக்கும் படத்தை இயக்குநர் ராம் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொண்ட நடிகர் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார்.
அஞ்சலி கதாநாயகியாக நடிக்க, நகைச்சுவை நடிகர் சூரி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், ராம் – நிவின் பாலி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது.