டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,346 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளது. அதே வேளையில் 263 உயிரிழந்துள்ளதுடன் 29,639 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 209 நாட்களில் இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வருகிறது. தினசரி பாதிப்பு 20ஆயிரம் முதல் 30ஆயிரம் வரையிலால் ஏறி இறங்கி காணப்படுகிறது. கடந்த வாரம் 20ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், இடையில் சில நாட்களில் மீண்டும் 20ஆயிரத்தை தாண்டி பதிவானது. இந்த நிலையில், தற்போது மீண்டும் 20ஆயிரத்துக்கும்கீழே குறைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, . இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், புதிதாக 18,346 பேர் கொரோனவால் பாதித்துள்ளனர். இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,38,53,048 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 263 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,49,260 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.33% ஆக உள்ளது
அதே வேளையில் நேற்று ஒரே நாளில் 29,639 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,31,50,886 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.93% ஆக உயர்ந்துள்ளது
தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,52,902 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.75% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 72,51,419 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 91,54,65,826 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.