டில்லி
உலகெங்கும் பல நாடுகளில் முகநூல் மற்றும் அதன் இரு துணை தளங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சில மணி நேரம் முடங்கி உள்ளது
சமூக வலைத்தளங்களில் முதன்மையில் உள்ளவை முகநூலும் மற்றும் அதன் இரு துணை தளங்களான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவையும் ஆகும். இவற்றின் மூலம் கோடிக்கணக்கானோர் தகவல்கள் பரிமாற்றம் செய்து வருகின்றனர். நேற்று இரவு உலக அளவில் இந்த தளங்கள் திடீரென முடங்கின.
இதனால் மக்களால் எவ்வித தகவல் பரிமாற்றமும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. உலகெங்கும் உள்ள ஆயிரக் கணக்கானோர் இது குறித்து மற்றொரு சமூக வலைத் தளமான டிவிட்டர் மூலம் தகவல்கள் தெரிவித்தனர். மொத்தத்தில் 13874 பயனாளர்கள் வாட்ஸ்அப் குறித்தும், 13,855 பேர் இன்ஸ்டாகிராம் குறித்தும், 3703 பேர் முகநூல் குறித்தும் 82 பேர் முகநூல் மெசெஞ்சர் குறித்தும் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஒரு சிலருக்கு வாட்ஸ்அப் போன்ற தளங்களில் தகவல் அளிப்பதில் தடங்கல் உள்ளதாக அறிகிறோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த தடங்கல் விரைவில் சரி செய்யப்படும் என அறிவித்த பிறகே பயனாளிகளின் பதட்டம் நின்றது. தற்போது இவை மீண்டும் சேவைகளைத் தொடங்கி உள்ளன.