சென்னை:
மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இன்றைய தினம், தற்போது வரை 15.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 42 சதவிகித முதியவர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்றார்.
மேலும் பேசிய அவர், மழை காரணமாக 16 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டது என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel