பெங்களூரு
இன்று கர்நாடகாவில் 589 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
கர்நாடகாவில் இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 29,76,589 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,807 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 887 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 29,26,284 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 12,469 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 809 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதுவரை 20,51,133 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இன்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை 14,186 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1,160 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 20,25,806 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 11,142 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.