க்னோ

நடைபெற உள்ள உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தைக் காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தொடங்க உள்ளார்.

அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இங்கு ஆட்சி செய்யும் பாஜக வை விழ்த்த காங்கிரஸ் கட்சி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.   இந்த மாநிலத்தில் ஆளும் பாஜக வை வீழ்த்த 100 வார் ரூம் அமைக்கும் ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறது.  காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி லக்னோவில் முகாம் இட்டுள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள், “நேற்று உ பி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்துக்கு வந்த செயலர் பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவை தேர்தலில் போட்டியிட உள்ள காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வது குறித்த ஆலோசனையை அவர் தொடங்கினார். இம்மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக லக்னோ வந்து இங்கு ஐந்து நாட்கள் தங்கவுள்ளார்.

அவர் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்கள் உள்ளதால், இந்த தேர்தலை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்தித் தேர்தல் களத்தில் பணியாற்ற அறிவுறுத்தி உள்ளார்  அக்டோபர் 2 ஆம் தேதி அதாவது காந்தி ஜெயந்தி அன்று காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தைப் பிரியங்கா காந்தி தொடங்கி வைக்கிறார்.  பிறகு அவர் நவராத்திரி முதல் நாளில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடர்கிறார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரசாரத்தை முறியடிக்க 100 ‘வார் ரூம்’ அமைக்கப்பட்டு, காங்கிரஸ் சித்தாந்தங்களின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்வோம். மக்களை பாஜகவிடம் இருந்து காப்பாற்றும் வகையில் பிரசாரங்கள் வகுக்கப்படும்.  மேலும் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் வகையில் வரும் அக். 2ம் தேதியன்று லக்னோவில் இருந்து வாரணாசிக்கு பேரணியாகச் செல்ல  திட்டமிட்டுள்ளோம்’ என்று கூறினர்.