டில்லி
அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள் அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்
சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில் அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் 6 யூனியன் பிரதேசங்களில் இந்த முறை சோதனை முறையில் நடைபெற்று வெற்றியைக் கண்டுள்ளது. இதை நாடு முழுமைக்கும் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
அதை தொடர்ந்து இன்று நாடு முழுமைக்குமான ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தைப் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்துள்ளார். தற்போது ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய திட்டம் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதைக் கொண்டாடும் வகையில் இன்று இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இயக்கத்தின்படி குடிமக்களின் சுகாதார விவரங்கள் அடங்கிய அடையாள் அட்டை ஒன்று அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விவரங்களைச் சுகாதாரக் கணக்கு என்னும் அடிப்படையில் மொபைல் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த செயலியில் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த அனைத்து தகவலும் தெரிந்து கொள்ள முடியும்.