இந்திய திரையுலகம் வாரிசுகளால் நிறைந்திருக்கிறது. ஆண்கள் மட்டுமில்லை, பெண் வாரிசுகளும் திரையுலகில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்நிலையில் இந்திய சினிமாவில் இன்னொரு வாரிசு நடிகை உதயமாகிறார்.
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகிறார்.
தரமணி பட நாயகன் வசந்த் ரவி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகை சரஸ்வதி ஏற்கனவே ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான ’சர்வம் தாளமயம்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் ஆடியிருந்தார்.