நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் நாகை மீனவர்களை இடலங்கை கடற்கெள்ளையர்கள் தாக்கி கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் 3 மீனவர்கள் காயமடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே மீன் படித்திக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியால் தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை பகுதியச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் அவர்களுக்கு சொந்தமான பைபர் படகில் மீன்படிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரை தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்போது திடீரென 2 பைபர் படகில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள், அவர்களின் படகை வழிமறித்து, அவர்களை தாக்கி படகில் இருந்த 400 கிலோ வலை, ஜிபிஎஸ் கருவி, செல்nபான் உள்ளிட்ட 4 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த தாக்குதலில், மீனவர் சிவகுமாருக்கு தலையில் வெட்டுக்காயம் பட்டதால், அவர் படகிலேயே மயங்கி மற்றவர்களையும் இரு கம்பியால் சரமாரியாகி தாக்கி உள்ளனர். இதனால் சோர்வடைந்தமீனவர்கள், படகை கரைக்கு திரும்பினர். இன்று அதிகாலை ஆறுகாட்டுத்துறைக்கு திரும்பியவர்கள், சக மீனவர்களிடம் குறியதுடன், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மீன் அவரிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
இந்திய எல்லைக்குள் தொடர்ந்து அத்துமீறல் நடப்பதால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.