ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 23.18 கோடியை தாண்டியதுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47.50 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதன் தாக்கம் தொடங்கி 2 ஆண்டுகளை நெருங்கிய நிலையில், முழுமையான இன்னும் அகற்றப்பட முடியாத நிலை உள்ளது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசிகள் செலுததப்பட்டு வருகின்றன. ஆனால், கொரோனா உருமாறிய நிலையில் பரவி வருகிறது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 231,893,647 கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 208,486,836 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றில் இதுவரை 4,751,259 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் தொற்றுபாதிப்பு காரணமாக 18,655,552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 18,560,103 (99.5%) நிலைமை சுமாராகவும், 95,449 (0.5%) பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.