சென்னை: தமிழ்நாட்டில் 9மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், மொத்தமுள்ள 27,003 பதவிகளுக்கு 97,831 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
புதிய மாவட்டங்கள் பிரித்ததன் காரணமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் கிராம ஊராட்சி வார்டு, கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 27,003 பதவிகளுக்க தேர்தல் நடைபெற உள்ளது.
போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22ந்தேதியுடன் முடிவடைந்தது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனுக்கள் விவரம்
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு மொத்தம் 72,071 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 15,967 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 8,671 பேர் பதவிக்கு பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,122 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 97,831 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.
9 மாவட்டங்களில் மொத்தம் 27,003 ஊராட்சி பதவிகள் மட்டுமே உள்ள நிலையில், 97,831 (கிட்டதட்ட ஒரு கோடி) பேட் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.