சென்னை: ஓய்வுபெற்ற தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த திரிபாதி ஜூன் 30ந்தேதி ஓய்வு பெற்றார். அதையடுத்து, அந்த பதவியில் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஜிபி திரிபாதி “1985ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்தவர். தமிழகத்திற்கு பணி ஒதுக்கப்பட்டு, 36 ஆண்டுகளாக நான் பல பொறுப்புகளில் தமிழக காவல்துறையில் பணியாற்றியுள்ளார். இதுகுறித்து தனது பிரிவுபசார விழாவில் பேசிய திரிபாதி,  தமிழ்நாடே தனது தாய் வீடு என்று உருக்கமாக பேசியதுடன், தனது 36 ஆண்டு கால பணிக்காலத்தில், பொதுமக்களின் நலன் கருதியும், காவல்துறையின் நன்மதிப்பை மேம்படுத்துவதிலும், தமிழக அரசின் எண்ணங்களை செயல்படுத்துவதிலும் முழுமனதோடு செயலாற்றியதாகவும், கடந்த 36 ஆண்டு காலத்தில் பல முக்கிய பொறுப்புகளை வழங்கிய தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கவதாகவும் கூறினார்.

நேர்மையான அதிகாரியான ஓய்வுபெற்ற  போலீஸ் டி.ஜி.பி. திரிபாதியை  ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராக நியமிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.