துபாய்:
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 185 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 ரங்களும், மஹிபால் லோமோர் 43 ரன்களும் அடித்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் 25 ரன்கள் அடித்தார்.
பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சாளர்களில், அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டை வீழ்த்தினர். முகமது ஷமி 3 விக்கெட்டையும், இஷான் பொரல், ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
186 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், கேஎல் ராகுல் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் இழந்தார். தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 183 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்த வெற்றி மூலம் 6வது இடத்திலிருந்த ராஜஸ்தான் அணி அணி 5-ஆவது இடத்திற்கு முன்னேறியது.
ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்களில் சேத்தன் சகாரியா, மஹிபால் லோமோர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
ஐபிஎல் தொடரில் துபாயில் நாளை நடக்க உள்ள போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்க உள்ளது.