சென்னை: 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
4 சக்கர வாகன விபத்துகளில் வாகன சேதங்களை தவிர்க்க முன் பகுதியில் பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு 2020ம் தடை விதித்துள்ளது. அதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அரசு வாகனங்களில் பெரிய பெரிய பம்பங்கள் பொருத்தப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு 4 சக்கர அரசு வாகனங்களில் முன்பக்கம் உள்ள பம்பர் உள்ளிட்ட உதிரி பாகங்களை நீக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், மத்தியஅரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் பல கட்ட விசாரணைகளை தொடர்ந்து, இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், 4 சக்கர வாகனங்களில் பம்பர்கள் பொருத்த தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பு செல்லும் என தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.