டில்லி

ந்தியாவில் நேற்று 24,897 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,02,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,897 அதிகரித்து மொத்தம் 3,35,02,744 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 296 அதிகரித்து மொத்தம் 4,45,416 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 34,467 பேர் குணமாகி  இதுவரை 3,27,42,059 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,02,311 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 2,583 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,24,498 ஆகி உள்ளது  நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,546 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,836 பேர் குணமடைந்து மொத்தம் 63,40,723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 41,672 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 15,692 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,24,158 ஆகி உள்ளது.  இதில் நேற்று 92 பேர் உயிர் இழந்து மொத்தம் 23,683 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 22,223 பேர் குணமடைந்து மொத்தம் 43,32,897 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,67,049 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 677 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,68,543 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,627 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,678 பேர் குணமடைந்து மொத்தம் 29,16,530 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,358 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,661 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,47,041 ஆகி உள்ளது  இதில் நேற்று 23 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,360 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,623 பேர் குணமடைந்து மொத்தம் 25,94,697 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 16,984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 839 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,39,529 ஆகி உள்ளது.  நேற்று 7 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,078 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,142 பேர் குணமடைந்து மொத்தம் 20,11,063 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 14,388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.