பெய்ஜிங்:
பெய்ஜிங் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தி சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெய்ஜிங்கின் டோங்சோ மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ மற்றும் 60 சதுர மீட்டர் பரப்பளவு பற்றி எரிந்தது.
தீ விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், தங்கள் மீட்புப் பணிக்காக வந்த போது ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்து இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கு மின்சார மிதிவண்டிகளை வீட்டில் உட்புறத்தில் சார்ஜிங் செய்த போது ஏற்பட்ட மின்சார கோளாறே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.