திருவள்ளூர்:
டுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மொபைல் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்தாலும், 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது. மக்கள் கடைபிடிக்கும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைத் தொடர்ந்தே 3வது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக பிரபல மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே வேளையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி போடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் மொபைல் பரிசு வழங்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களில், மூன்று பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சிறந்த மீம்ஸ்களை உருவாக்குபவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அதன்படி, கொரோனா விழிப்புணர்வு தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் தொகை வழங்கப்படும். மீம்ஸ்களை பதிவிட வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 18. மீம்ஸ் பதிவிடுபவர்கள் @TiruvallurCollr-ஐ டேக் செய்ய வேண்டும் என்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தகது.