சென்னை: முன்னாள் மாநில பாஜக தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சருமான  எல் முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தாலும், அவரை அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது  மத்தியஅமைச்சராக மோடி நியமித்தார். இதனால், அவர் 6 மாதத்திற்குள் எம்.பி.யாக வேண்டும்  நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, எல்.முருகனை,   மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுகிறார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.