சென்னை: “அகரம் இப்போ சிகரம் ஆச்சு” என கீழடி அகழ்வாய்வு குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட் பதிவிட்டு உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், கொந்தகை, மணலூா் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சுடுமண் முத்திரை, காதணிகள், தந்தத்தினாலான பகடை, முதுமக்கள் தாழி, உருவப் பொம்மை, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள், நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கீழடி அருகே அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டுஉள்ளன. இதை தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டிவிட்டில் படத்துடன் பதிவிட்டு உள்ளார்.
Patrikai.com official YouTube Channel