திருப்பதி
தமிழகத்தை சேர்ந்த 3 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவி ஏற்றது. அப்போது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் நியமனம் செய்யப்பட்ட பல குழுக்களின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அதையொட்டி அந்தக் குழுக்கள் கலைக்கப்பட்டன.
அவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. பிறகு அறங்காவலர் குழு தலைவர் உள்ளிட்ட அனைவரும் ஆந்திர அரசால் புதியதாக நியமிக்கப்பட்டனர். முன்பு 16 உறுப்பினர்களாக இருந்த அறங்காவலர் குழு 24 உறுப்பினர்களாக அதிகரிக்கப்பட்டது. இன்று திருப்பதி தேவஸ்தானம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார்,. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன், மற்றும் எஸ் ஆர் எம் யு கண்ணையா ஆகியோர் ஆவார்கள்.