சென்னை: உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் அன்று அறிவித்துள்ள பாமகவின் அரசியல் நாகரிகம் கடுமையாக விமர்சிக்கப்படுவதால், ஊர கஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பாமக எடுத்த தற்காலிகமுடிவு என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறது பாமக தலைவர் ஜி.கே.மணி ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 எம்.எல்.ஏ.க்களை பெற்றது பாமக. தேர்தல் முடிந்து 3 மாதங்களே ஆன, அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றுகொண்டது, அதிமுக ஆதரவுடன் பாமக தலைவரின் மகன் அன்புமணி ராமதாசுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி பெற்ற, பாமக இன்று அதிமுகவுக்கு துரோகம் இழைத்துள்ளது. நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்து உள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு காரணமாக ஜிகே மணி வெளியிட்டிருந்த அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தலில் பாமக வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில், இணைய வழியில் நடந்தது. அதில், , கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், பாமகவின் அரசியல் நடவடிக்கைகள் தடம்புரள தொடங்கின. திமுக அரசின் முக்கியமான அறிவிப்புகளை பாமக பாராட்டி வந்தது. திமுகவுடன் பாமக நெருக்கம் காட்ட தொடங்கியது. ஒவ்வொரு அறிவிப்பையும் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் தனது நடவடிக்கைகைய திசை திருப்பி வந்தது. திமுக அரசை வெகுவாக புகழ்ந்து வந்தது. அதைத்தொடர்ந்துதான், தற்போது அதிமுகவுடனான கூட்டணியை முறிந்துகொண்டுள்ளது. இப்போது தனித்து நிற்கும் பாமக வரும் காலங்களில் திமுக கூட்டணிக்கு செல்லுமா என்ற கேள்விகளை இது எழுப்பி உள்ளது. பாமகவின் வரும்கால அரசியல் நிலைப்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை இது ஏற்படுத்தி உள்ளது.
பாமகவின் அரசியல், கூட்டணி கட்சிகளின் காலை வாரும் நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், ஜி.கே.மணி தற்போது புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், 9 மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பாமக எடுத்த தற்காலிக முடிவுதான் என்று விளக்கம் அளித்துள்ளார்.