சென்னை: தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் இலக்கை மிஞ்சி சாதனை படைத்ததுள்ளது என்றும், விடுபட்டவர்களுக்கு இன்றும் 300 முகாம்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் மா.சு. தகவல்அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறனார்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மாநிலம் முழுவதும 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்களிளும், சென்னையில் மட்டும் 1600 முகாம்களும் நடைபெற்றன. இந்த முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இந்த முகாம்கள் மூலம் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் சுகாதாரத்துறையின் தீவிர முயற்சியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 20 லட்சம் தடுப்பூசி என்ற இலக்கு விரைவாகவே எட்டப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மிகப்பெரிய பலன் கொடுத்துள்ளது. மொத்தம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளார்கள். சென்னையில் இதுவரை 1,91,350 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இது இந்திய அளவில் வேறு எந்த மாநிலமும் எட்ட முடியாத சாதனை. நமது மாநிலத்தில், இதுவரை 66 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். மொத்தம் 6 கோடி பேருக்கு போட வேண்டும். அதில் 4 கோடியே 3 லட்சம் பேர் போட்டுள்ளார்கள். தடுப்பூசி கூடுதலாக கிடைத்தால் இன்னும் அதிக அளவில் போட முடியும்.
300-க்கும் மேற்பட்ட முகாம்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாக பொதுமக்கள் வந்ததால் சிலருக்கு போட முடியவில்லை. அவ்வாறு போட முடியாதவர்களிடம் தொடர்பு எண்களை அலுவலர்கள் வாங்கி உள்ளனர். அவர்களுக்கு இன்று ஊசி போடப்படுகிறது.
தமிழக அரசின் சாதனைக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டலியா தொலைபேசியில் தொடர்புகொண்டு சிபாராட்டினார். தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் சிறப்பாக உள்ளது என்றார். அதை தொடர்ந்து 13½ லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். மேலும் கூடுதலாக அனுப்பும்படி கோரிக்கை வைத்துள்ளோம்.
மாநிலத்தில் உள்ளவர்களில் 80 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டால் 3-வது அலை வந்தாலும் பயமில்லை. சிறப்பு முகாம்கள் நல்ல பலனை கொடுத்துள்ளதால் மீண்டும் குறிப்பிட்ட நாட்களை தேர்வு செய்து தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.