சென்னை: கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் ஜாமினி வெளிவர முடியாத வகையில் சட்டத்திருத்தம் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொரின் கடைசிநாள் அமர்வு இன்று நடைபெறுகிறது. இன்று நீட் தேர்வுக்கு திரான தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நிலையில், கோயில் சொத்துக்களை அபகரிப்பவர்களை கைது செய்வதற்கான சட்ட மசோதாவும் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவில் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்பாளர்கள் கைது செய்து ஜாமீனில் விட முடியாத அளவிற்கு சட்ட திருத்தம் செய்யப்பட்டியிருப்பதாகவும், ஏற்கனவே உள்ள சட்டத்தில் கைது செய்வதற்கான வழிவகை இல்லை என்பதால், இந்த திருத்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார்.‘