சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் வித்யாலயா கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாகச் சிகிச்சை அளித்துவந்தவர் சித்த மருத்துவர் வீரபாபு.

கடந்த ஆண்டின் இறுதியில் உழைப்பாளி என்ற பெயரில் ஒரு மருத்துவமனை தொடங்கி பத்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவச் சிகிச்சை அளித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது முடக்கறுத்தான் என்ற படத்தை வீரபாபு இயக்கி நடித்துள்ளார். கதாநாயகியாக மஹானா நடித்துள்ளார். இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. வீரபாபு, மஹானா உள்ளிட்ட படக்குழுவினரும் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.