சென்னை: 
ன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக் காரணியாகவும், தற்கொலைக்குத் தூண்டுவதாகவும் உள்ளது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை அளித்துக் காப்பாற்றலாம்.
ஆனால் விழிப்புணர்வு குறைவு, போதிய மருத்துவர்கள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் மனநோயாளிகளின் எண்ணிக்கை பத்து ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து ஒன்றிய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவிக்கையில், 136 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், 47 அரசு மன நல மருத்துவமனைகள் மட்டுமே உள்ளது. இது போதுமானதாக இல்லை. ஒவ்வொரு தாலுகாவிலும் மன நலச் சிகிச்சை மையம் என நாடு முழுவதும் மன நல மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.