ண்டிகர்

ரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போடாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.   ஆயினும் விரைவில் கொரோனா மூன்றாம் அலை தாக்குதல் நிகழலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இதையொட்டி நாடெங்கும் லட்சக்கணக்கானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது.

மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளன.  ஏறத்தாழ அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்னும் நினைப்புடன் அரசு செயல்பட்டு வருகிறது.  ஆயினும் ஒரு சிலர் இன்னும் முதல் டோஸ் தடுப்பூசி கூட போட்டுக் கொள்ளாமல் உள்ளனர்.

இதையொட்டி பஞ்சாப் மாநில அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதன்படி வரும் செப்டம்பர் 15 அதாவது இன்னும் 5 நாட்களுக்குள் கொரோனா முதல் தடுப்பூசி கூட போடாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  அரசு ஊழியர்கள் மருத்து வ காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் முதல் டோஸ் தடுப்பூசி போடாமல் இருக்கக் கூடாது என திட்டவட்டமாக அரசு தெரிவித்துள்ளது.