மதுரை
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து அனுமதிக்கக் கோரி தமிழக அர்சு மீது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்து முன்னணியானர் வழக்கு பதிந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத விழாக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும் அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கவும் தமிழக அர்சு தடை செய்துள்ளது. பக்தர்கள் வீடுகளில் சிலைகளை வைத்து அவற்றை தனித்தனியே எடுத்துச் சென்று நீரில் கரைக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இதை எதிர்த்து இந்து முன்னணியினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், ”தமிழகத்தில் வரும்.10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு கொரோனா பரவலைக் காரணம் காட்டி விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைக்கவும், கூட்டமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி,என்பது மக்கள் அனைவரும் இணைந்து கொண்டாடும் விழா ஆகும். ஏற்கனவே மக்கள் கூடும் திரையரங்குகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கூட விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆகவே, பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபடவும், ஊர்வலமாகச் செல்லவும் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செப். 10-ல் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், அந்த சிலைகளை 12-ம் தேதி நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’.என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.