கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வருடம் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக் பாஸ் 5 தாமதமாகியுள்ளது.

சமீபத்தில் ப்ரோமோ ஷூட்டிங் நடைபெறும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 முதல் கட்ட பணிகள் போட்டோ ஷூட் உடன் தொடங்கப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் 5-ம் சீசனுக்கு ரசிகர்கள் தயாராகி வரும் நிலையில், இதனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் அதற்கான ப்ரோமோ படப்பிடிப்பு நடந்தது.

பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss Tamil) நிகழ்ச்சியின் இரண்டு புரொமோகள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இந்த பட்டியலில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, ஜி.பி.முத்து, ஷகீலாவின் மகள் மிளா, துள்ளுவதோ இளமை அபினவ், வடிவுக்கரசி, ஐஸ்வர்யா, 90 மஎம்எல் படத்தில் நடித்த மசூம் ஷங்கர், சுசன் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் ஒவ்வொரு பிக் பாஸ் சீசனின் போதும், தனது பெயர் அடிபடுவதாக, நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், “பிக்பாஸ் போட்டியாளர் பட்டியலில், ஒவ்வொரு சீசனிலும் எனது பெயரை பார்க்கிறேன். நான் பிக் பாஸ் தமிழ் 5-ம் சீசனில் இல்லை. பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]