சென்னை: சசிகலாவுக்கு சொந்தமான பையனூர் பங்களா உள்பட ரூ.100 கோடி சொத்துக்களை மத்தியஅரசின் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று கர்நாடக சிறையில் தண்டனை அனுபவித்த சசிகலா சில மாதங்களுக்கு முன்பு தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த நிலையில், மீண்டும் அதிமுகவை கைப்பற்றி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். பின்னர் சட்டமன்ற தேர்தலின்போது, அரசியலில் இருந்து ஒதுங்குவதாக கூறினார். பின்னர் தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாகவும், அதிமுகவை கைப்பற்றப்போவதாகவும் கூறி வருகிறார்.
சசிகலாவின் அறிவிப்புகளுக்கு தற்போதைய அதிமுக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக மத்தியஅரசிடம் மண்டியிட்டு வருகின்றனர். இதன் காரணமாக, சசிகலாமீதான பழைய வழக்குகள் மீண்டும் தூசு தட்டப்பட்டு, அவருக்கு நெருக்குதல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, . சசிகலாவுக்கு சொந்தமான நிலம், பங்களா உள்பட ரூ.100 கோடி மதிப்பிலான சொந்ததுக்களை பினாமி சொத்துக்குவிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சசியின் மேலும் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்
முன்னதாக சசிகலா சிறையில் இருந்தபோது, நீதிமன்ற அனுமதியோடு, மறைந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டின் பூட்டை உடைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரிதுறை சோதனை நடத்தியது. அப்போது, ரூ.1,600 கோடிக்கும் மேல் வரை வரி ஏய்ப்பு செய்ததாகவும், பல்வேறு நிறுவனங்களை பினாமிகளின் பெயரில் வாங்கி சொத்துகளை முறைகேடாக குவித்திருப்பதாக கூறப்பட்டது. அதையடுத்து, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த சில காலத்தில், போயஸ்கார்டனில் அவர் கட்டிவந்த பங்களா உள்பட 64 சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், தற்போது, சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி 49 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
சசிகலா அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. இது மோடி அரசின் சதிச்செயல் என்று சசிகலா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்
பையனூர் பங்களா:
இந்த இடம் இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு சொந்தமானது. பழைய மகாபலிபுரம் சாலையில், பையனூரில் அமைந்துள்ள இந்த இடத்தை, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அவரது தோழியான சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்கிக் குவித்தனர். அதுபோலத்தான், பையனூர் பங்களாவையும் மிரட்டி வாங்கினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும், விடாப்படியாக அந்த பையனூர் பங்களாவை சசிகலா கும்பல் கைப்பற்றியது.
இந்த பங்களாவைச் சுற்றிலும் உள்ள பல ஏக்கர்மேய்ச்சல் நிலங்களும் அருகே உள்ள கருங்குழிப்பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த பலரை மிரட்டி வாங்கப்பட்டது. தற்போது அந்த பங்களாவுக்கு சொந்தமாக, பங்களாவைச் சுற்றிலும், சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது. அத்துடன் அந்த ஆடம்பர மாளிகையும் உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக இருந்த 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை, முதல்வராக ஜெயலலிதா முதல்முறையாக பதவி வகித்த போது, இதுபோனற் சொத்துக்கள் தமிழ்நாடு முழுவதும் சசிகலாவின் மன்னார்குடி மாஃபியா கும்பல் வாங்கி குவித்தது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் ரூ. ஆயிரத்து 600 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கம்! வருமான வரித்துறை அதிரடி