
‘பூமிகா’ திரைப்படத்தை தொடர்ந்து அர்ஜுனுடன் இணைந்து புதிய த்ரில்லர் கதையொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதில் அர்ஜுன் காவல்துறை விசாரணை அதிகாரியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் பள்ளி ஆசிரியையாகவும் நடிக்கவுள்ளனர்.
தினேஷ் லட்சுமணன் இயக்கவுள்ள இந்தப் படத்தினை ஜி.எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. செப்டம்பர் 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
[youtube-feed feed=1]