ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறத் துவங்கியதும், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேரினார், இதனைத் தொடர்ந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஆப்கானை தாலிபான் படைகள் கைப்பற்றினர்.

ஆப்கானை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஒரு மாதம் ஆக இருக்கும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், பஞ்சசீர் பகுதியில் தாலிபான் எதிர்ப்புப் படையினருக்கும் தாலிபான்களுக்கும் இடையே கடும் சண்டை நிலவியது.

இந்த சண்டையில், தாலிபான் படையினருக்கு பாகிஸ்தான் உதவி புரிந்ததாக ஈரான் குற்றம் சாட்டியது, மேலும், பாகிஸ்தான் இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால் பின் விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தது.

ஆப்கானில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அரசும் தலைமை ஏற்காத நிலையில், உள்நாட்டு குழப்பம் மற்றும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது.

ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பர்துஷேவ் பிரதமர் மோடி – பழைய படம்

பாகிஸ்தான், ஆப்கான் நிலைமை மற்றும் சீனாவுடனான உறவு குறித்து இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் நிகோலாய் பர்துஷேவ் பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை நாளை சந்தித்து பேசுவார் என்று மோஸ்கோ-வுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா கூறியுள்ளார்.